’’குரு பூஜைக்கு சென்றீர்களா என்றேன்? யாரு குருன்னு கேட்டார் ’’: விஜய் சேதுபதியை தாக்கியவர் பரபரப்பு பேட்டி
விஜய் சேதுபதியை நவம்பர் 3ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் ஒருவர் தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. கன்னடர்கள் அவரை தாக்கிவிட்டனர் என முதலில் தகவல் பரவியது.

இதற்கிடையே, விமானத்தில் வந்த விஜய் சேதுபதி உதவியாளர் ஜான்சன் என்பவருக்கும், மகாத்மா காந்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதுதான் கைகலப்பாக மாறியது என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில் , மகாத்மா காந்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்னேன்.
[
உடனே அவர் ‘இது தேசமா’ என்றார். அதற்கடுத்ததாக குரு பூஜைக்கு சென்று வழிபட்டீர்களா என்று கேட்டேன். யார் குரு என்று கேள்வி கேட்டார்.
அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றியபோது விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் என்னை தாக்கினார்கள் அதனால் நான் திருப்பி தாக்கினேன்” என்று கூறியுள்ளார்.
தற்போது இவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.