நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட மஹா திரைப்பட டீசர்! சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!
சிம்பு, ஹன்சிகாவின் மஹா திரைப்பட டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று மாலை, அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஹன்சிகாவிற்கு இது 50வது திரைப்படமாகு. இந்த படம் பல வருடங்கள் முன்பே வெளியாகியிருக்க வேண்டும். தயாரிப்பாளரின் பொருளாதார நெருக்கடியால் பலமுறை படப்பிடிப்பு தடைபட்டு, தற்போது முழு பணியும் நிறைவடைந்தது.

நடுவில் இயக்குனர் ஜமீலுக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சனையாகி, என்னை புறக்கணித்து வேறொருவரை வைத்து படத்தை முடித்து, ஓடிடியில் வெளியிட பார்க்கிறார் என ஜமீல் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுக்கும் அளவுக்கு விஷயம் கைமீறியது.

மஹாவில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். கோவாவில் ஹன்சிகா - சிம்பு சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்றும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் மஹா டீஸரை வெளியிட்டுள்ளார். இந்த டீசரை பார்த்த ரசிகர்கள், உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...! IBC Tamil