வீட்டுக்குள் வந்த மந்திரவாதி - அகோர பூஜையால் வீதிக்கு வந்த கோடீஸ்வரர்! மர்மம் என்ன?
குஜராத்தில் மந்திரவாதி ஒருவரால், கோடீஸ்வரர் ஒருவர் 94 லட்ச ரூபாயை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் உள்ள அகமதாபாத் பெட்டாபூரை சேர்ந்த ஹிடேஷ் யாகிக் மாந்திரீகம், பில்லி, சூனியம் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
இதன் மூலம் அப்பகுதி மக்களிடம் பணம் ஏமாற்றி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஜிகீஷ் மாந்திரீகம் மேல் நம்பிக்கை ஏற்பட்டு, தன் பிரச்சினை தீர்த்து வைக்குமாறு, யாகிக்கிடம் சரணடைந்துள்ளார். மேலும் தன்னை பல கோடிகளுக்கு அதிபதியாக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை பயன்படுத்தி கொண்ட அந்த போலி சாமியார், பூஜைகள் செய்வதாக அவ்வப்போது பல லட்சங்களில் பணமும், நகையும் வாங்கியுள்ளார். மேலும் ஆஸ்ரமம் கட்டுவதாக கூறி 94 லட்ச ரூபாயும், நிலமும் வாங்கியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு கோடீஸ்வரராக மாறியுள்ளார். இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜிகீஷ் மந்திரவாதி மோசடி குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.