தெலுங்கு இயக்குநர் மகேஷ் காத்தி உயிரிழப்பு! திரையுலகினர் அதிர்ச்சி!
தெலுங்கு நடிகரும் இயக்குநருமான மகேஷ் காத்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். தெலுங்கு சினிமா திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் நடிகர் மகேஷ் காத்தி.

இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ‘பெசராட்டு’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தெலுங்கு படங்களில் நடித்து வருவதோடு திரைக்கதை எழுத்தாளராகவும் பல படங்களுக்குப் பணியாற்றியுள்ளார்.
ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக்பாஸிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர், சமீபத்தில் நெல்லூரிலிருந்து தனது காரில் ஹைதராபாத் செல்லும்போது, எதிர்பாராத விதமாக லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், கடந்த இரண்டு வாரங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு தெலுங்கு சினிமா வட்டாரங்களிடையே
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.