என்னடா புது திருப்பம்? திமுகவில் இணைகிறார் ம.நீ.ம. மகேந்திரன்!
dmk
mnm
magendran
joins
By Anupriyamkumaresan
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் நாளை மாலை 5 மணிக்கு திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற மகேந்திரன், தேர்தல் தோல்விக்கு கமல்ஹாசனே காரணம் என்று கூறி கட்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் ம.நீ.மவில்
இருந்து விலகிய மகேந்திரன் நாளை திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.