மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - எப்படி தெரியுமா?

M K Stalin Tamil nadu Government of Tamil Nadu DMK
By Jiyath Sep 18, 2023 03:14 AM GMT
Report

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மகளிர் உரிமை தொகை

தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்த மாதம் செப்டெம்பர் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சேர 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்.

மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - எப்படி தெரியுமா? | Magalir Urimai Thogai Women Can Reapply From Today

இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தற்போது இதன் மூலம் 1.6 கோடி மகளிர் மதம் ரூ.1000 என பயன்பெற்று வருகின்றனர்.

மீண்டும் விண்ணப்பிக்கலாம்

இந்நிலையில் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இ-சேவை மூலம் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - எப்படி தெரியுமா? | Magalir Urimai Thogai Women Can Reapply From Today

இதில் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன், நிராகரிக்கப்பட்ட 56.50 லட்சம் பேருக்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இன்று முதல் அவர்களின் செல்போன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.