மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவு வைப்பு

TVK
By Fathima May 15, 2026 04:24 AM GMT
Report

மே மாதத்துக்கான மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத்தொகை, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்ட நிலையில் இன்று மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான அறிவிப்பில், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுவதாகவும், விரைவில் மே மாத இறுதிக்குள் வரவு வைக்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.