மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயரும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

Tamil nadu TVK
By Vinoja Jul 05, 2026 01:43 PM GMT
Report

தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.

ராஜபாளையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயரும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி | Magalir Urimai Thogai Scheme Amount Increased

பணிகள் தீவிரம்

மேலும், தமிழ்நாட்டில் தகுதியான அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கடந்த ஆட்சியில் நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் மற்றும் ஒரே நபரின் பெயரில் பலமுறை செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதற்காக பொதுமக்கள் சிறிது பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், முதலமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அதேபோல், தவெக ஆட்சியில் ஊழலுக்கு இடமிருக்காது என்றும், அரசு சேவைகளுக்காக அதிகாரிகள் யாரேனும் பணம் கோரினால் உடனடியாக புகார் அளிக்குமாறு பொதுமக்களிடம் அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.