உயரும் மகளிர் உரிமைத் தொகை; எவ்வளவு தெரியுமா? முதல்வர் தகவல்
மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிமைத் தொகை
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ''நம்முடைய இலட்சியப் பயணத்தில் மிகப்பெரிய முன்னெடுப்பாக, வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக அமைந்திருப்பதுதான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த திட்டத்தின் வெற்றியின் உச்சம் என்ன தெரியுமா? அண்டை மாநிலங்கள்கூட இந்தத் திட்டத்தை தங்களுடைய மாநிலங்களில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள்நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகின்றவர்கள் கூட இந்த திட்டத்தை,
முதல்வர் தகவல்
அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்திஸ்கர், ஒடிசா, புதுச்சேரி அதுமட்டுமல்ல, தற்போது கர்நாடகா, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், சிக்கிம் என பத்து மாநிலங்களில் உரிமைத் தொகை மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது.

தலைநிமிரும் தமிழ்நாட்டில், பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும்! பெண்களின் உரிமையும் உயரும்'' என தெரிவித்துள்ளார். மேலும் மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அநுர அரசுக்கு வந்து குவியும் டொலர் ஆதரவும் மலையகத்தை பறிக்க திட்டம்போடும் தமிழ் அரசியல் எதிரிகளும்! IBC Tamil