மகளிர் உரிமை தொகை விவகாரம்...18-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்த அண்ணாமலை!!
திமுக அரசின் சார்பாக கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் வரும் 18-ஆம் தேதி கோரிக்கை ஒன்றை முன்வைத்து அண்ணாமலை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செம்படம்பர் 15ம் தேதி திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
தமிழக்த்தில் மொத்தமாக 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் இந்த உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
போராட்டம் அறிவித்த அண்ணாமலை
இதில், உரிமை தொகைக்காக விண்ணப்பித்தவர்களில் பலர் நிபந்தனைகள் பலவற்றின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு இந்த 1.06 கோடி பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனை பல தரப்பினரும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக் கோரி விழுப்புரத்தில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.