சென்னையில் டெங்கு பரவலா..? 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!!
சென்னை மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் மக்களிடையே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் ரக்ஷ்ன்
சென்னை மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் அய்யனார் - சோனியா தம்பதி. இவர்களது 4 வயது மகன் ரக்ஷன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுவன் ரக்ஷனை அருகே இருக்கும் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கே மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் சிறுவன் ரக்ஷனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார சீர்கேடா..?
இதன் காரணமாக ரக்ஷனுக்கு மேல்சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 6-ம் தேதி எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதித்த நிலையில், அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுவன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். டெங்கு காய்ச்சலின் காரணமாக சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் பகுதியில் சுகாதார சீர்கேடா? என பெற்றோர்களும், உறவினர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.