மதுராந்தகம், தாராபுரம் வாக்குப்பதிவு நிறைவு - அக்டோபர் 9 வாக்கு எண்ணிக்கை
Maduranthakam, Dharapuram By election Voting concludes: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் வாக்குப்பதிவுகள் நிறைவு
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தவெகவில் இணைந்தனர்.
இதனையடுத்து இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்றது.

எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
இதனையடுத்து,கட்சி முகவர்களின் முன்னிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் பின்னர், அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.
இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
மாலை 5 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 78.53% வாக்குகளும், தாராபுரத்தில் 83.86% வாக்குகளும் பதிவாகியுள்ளது.