தவெக எம்.எல்.ஏ.க்களாக மரகதம் குமரவேல், சத்தியபாமா இன்று பதவியேற்றனர்

Tamil nadu TVK
By Yashini Oct 12, 2026 06:24 AM GMT
Report

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் இன்று எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இன்று பதவியேற்றனர்

தமிழகத்தில் தவெக ஆட்சியைப் பிடித்த பிறகு, மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

இதையடுத்து, அந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில், இருவரும் தவெக சார்பில் போட்டியிட்டனர்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்றது.

தவெக எம்.எல்.ஏ.க்களாக மரகதம் குமரவேல், சத்தியபாமா இன்று பதவியேற்றனர் | Madurantakam Tharapuram Mlas Swearing In Ceremony

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வெற்றி பெற்ற சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் இன்று காலை சட்டப்பேரவைத் தலைவர் அறையில் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, இருவரும் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.