ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன்!
மதுராந்தகத்தில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பிரசாரக்கூட்டம் நடைபெறுகிறது.
இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சித்தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்காக பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் மோடி, 3 மணிக்கு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், 3000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனின் படம் நிராகரிப்பு
அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பிரதமர் மோடி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் படங்கள் உள்ளன, டிடிவி தினகரனின் புகைப்படம் இல்லாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆனால் அமமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் எடப்பாடி பழனிச்சாமி படம் இடம்பெற்றுள்ளது.

மாம்பழ சின்னம்
மாம்பழ சின்னத்தை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வந்த நிலையில், மாம்பழ சின்னத்துடன் அன்புமணி ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றுள்ளது, மேலும் ராமதாஸின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.