மதுரையில் நடமாடும் காய்கறி வாகனம் துவக்கம்..!

madurai commissioner vegetable sell by vehicle
By Anupriyamkumaresan May 24, 2021 07:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

மதுரையில் நடமாடும் காய்கறி வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 1 வாரம் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் வசதிக்கு ஏதுவாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மதுரையில் இன்று நடமாடும் காய்கறி வாகன விற்பனை துவக்கப்பட்டது. முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, 15 நடமாடும் காய்கறி வாகனத்தை மாநகராட்சி ஆணையர் விசாகன் துவக்கி வைத்தார். 10 விதமான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

மதுரையில் நடமாடும் காய்கறி வாகனம் துவக்கம்..! | Madurai Vehiclevegetablesell Starts Commissioner