’’மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது" : எம்ஜிஆரை புகழ்ந்த மோடி

modi madurai mgr bjp aiamdk
By Jon Apr 02, 2021 11:41 AM GMT
Report

நல்லா இருக்கீங்களா மதுரை வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி என தமிழில் கூறிய பின் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய மோடி . இந்த மண் மீனாட்சி அம்மன் ஆலயம் அருள் புரியும் மண். நேற்று, மீனாட்சி அம்மனை சுந்தரேஸ்வரரையும் வணங்கி தரிசனம் செய்தேன். இனிவரும் நாட்களில் இந்த ஆன்மிக நிகழ்வை அடிக்கடி எண்ணி பார்ப்பேன்.

மதுரை மண், அழகர் பெருமாள் வீற்றிருக்கும் மண். கூடலழகர் வீற்றிருக்கும் மண். திருப்பரங்குன்றம் முருகன் வீற்றிருக்கும் மண். தமிழ்பண்பாட்டின் தொட்டிலாக மதுரை திகழ்கிறது. மகாத்மா காந்தியிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மண். தமிழுக்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

மதுரை என்றால், தமிழ் சங்கம் இருப்பது நினைவுக்கு வருகிறது. அதனால், தமிழ் இலக்கியம், பண்பாட்டையும் பாதுகாக்கிறவர்களை பாராட்டி வணங்குகிறேன்.இந்த பிராந்திய மக்கள் வலிமையான பலமும் பரந்த மனமும் கொண்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் சவுராஷ்டிராவில் இருந்து இங்கு வந்து வசிக்கின்றனர்.

தெலுங்கு பேசும் மக்கள் பல ஆண்டுகளாக இங்கு உள்ளனர். மதுரை நினைக்கும் போது ஒரே நாடு பெருமைமிகு நாடு என்பதன் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன்.எம்ஜிஆரை மறக்க முடியுமா ? தென் தமிழகத்திற்கு எம்ஜிஆருடன் நெருங்கிய தொடர்புஉள்ளது. மதுரை வீரன் படத்தை யாராவது மறக்க முடியுமா.

 

திரைப்படங்களில், எம்ஜிஆருக்கு குரல் கொடுத்தவர்களில் டி.எம்.சவுந்திரராஜன் குரலை மறக்க முடியுமா. ஆனால், மத்திய காங் அரசு, எம்ஜிஆர் அரசை கலைத்தது. மீண்டும் தேர்தல் நடந்தபோது மதுரை மேற்கு தொகுதியில் இருந்து எம்ஜிஆர் வெற்றி பெற்றார். அவர் பின்னால், பாறை போன்று மக்கள் கடுமையாக நின்றார்கள் தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக கூறிய மோடி ,மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய மோடி இனி வரும் நாட்களில், விமான திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் வர உள்ளன. கிராமங்களில் அதிவேக இணைய வசதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருவதாக கூறினார்.. மேலும், இந்த மண், இறைவனின் சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல் நிகழ்ந்த மண்.

தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை நாடு உணர துவங்கி உள்ளதாகவும் அதற்காக ஜல்ஜீவன் என்ற பெயரில் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2024க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் 16 லட்சம் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நிறைய குடிநீர் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. திமுக.,வும் காங்கிரசும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு எந்த விஷயமும் செய்யாத கட்சிகள். அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுத்தது அதிமுகவும் பா.ஜ.,வும் தான்.திமுக.வின் இயல்பு திமுக காங்கிரசார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். மதுரை மக்கள் அமைதியை விரும்பியபோது.

அவர்களின் குடும்ப பிரச்னை காரணமாக மதுரையை வன்முறை நகரமாக, கொலைநகராமாக மாற்றினார்கள். இந்த மதுரை மண்ணில் தான், பெண்களுக்கு அளிக்கும் மரியாதையை பார்க்கிறோம். திமுக.,வும் காங்கிரசும் மதுரையின் மதிப்பீடுகளை புரிந்து கொள்ளாத கட்சிகள். மீண்டும், மீண்டும் பெண்களை அவமானப்படுத்துவது காங்கிரஸ், திமுக.,வின் இயல்பு. என பிரதமர் மோடி பேசினார்.