கணவனை துடிக்க துடிக்க, அரிவாளால் வெட்டிய கொடூர மனைவி - மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்

madurai Traumatic event மதுரை கணவன் கொலை அதிர்ச்சி சம்பவம் husband-murder wife-arrest மனைவி கைது
By Nandhini Mar 21, 2022 04:46 AM GMT
Report

மதுரை மாவட்டம், மேலூர், பல்லவராயன்பட்டியைச் சேர்நத்வர் பொன்னையன். இவருடைய மனைவி அழகம்மாள்.

இத்தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பொன்னையனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால், தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வருவார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, பொன்னையனுக்கும் மனைவி அழகம்மாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மனைவி அழகம்மாள், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, பொன்னையனை சரமாரியாக வெட்டினார்.

பொன்னையன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, பொன்னையன் கீழே இறந்த நிலையில் கிடந்தார்.

உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொன்னையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து அழகம்மாளை கைது செய்து விசாரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடித்து வந்த கணவனை, மனைவி சராமரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.