மதுரையிலிருந்து திருப்பதி வரை இனி இண்டிகோ விமான சேவை - பக்தர்கள் மகிழ்ச்சி

பக்தர்கள் கோரிக்கையை ஏற்று முதன் முறையாக மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்கப்பட வேண்டுமென விமான பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், முதல் முறையாக இண்டிகோ நிறுவனம் மதுரையில் இருந்து திருப்பதிக்கு வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் விமானம் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி நாள்தோறும் மதுரை விமான நிலையத்திலிருந்து மதியம் 3.00 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4.20 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை அடையும்.

அதேபோல் திருப்பதி விமான நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு 6.40 மணிக்கு வந்து சேரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்த நேரத்தில் மதுரையிலிருந்து திருப்பதி செல்ல இந்த விமான சேவை, பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்