திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம்: மதுரையில் உச்சகட்ட பரபரப்பு

Madurai Tirupparankunram Murugan Temple
By Fathima Nov 28, 2026 04:09 AM GMT
Report

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில் மதுரையில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என கூறப்படும் நிலையில் மலை முழுவதும் பாதுகாப்பு பணியில் CRPF வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபத்தூணை சுற்றிலும் மூங்கிலால் ஆன மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

திருப்பரங்குன்றத்தைச் சுற்றி 130-க்கும் அதிகமான CRPF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தீபமேற்றுவதற்காக இந்துக்களும், சிறப்பு தொழுகையில் ஈடுபடுவதற்காக இஸ்லாமியர்களும் மலை மீது ஏறத் தொடங்கி விட்டனர்.  

தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் திருப்பரங்குன்றம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.