வீட்டின் பூட்டை உடைத்து துணிகர சம்பவம் - என்ன நடந்தது தெரியுமா?
மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 144 சவரன் தங்க நகைகளை திருடிய கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில அடைத்தனர்.
மதுரை மாவட்டம் செல்லூர், தல்லாகுளம், திருப்பாலை, தெப்பக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த குற்றவாளிகளை பிடிக்கும் வகையில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னையை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவனியாபுரத்தை சேர்ந்த அருண்குமாரும் வாடிக்கையாக கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார், குற்றவாளிடம் இருந்து 144 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய உதவியாக இருந்த தனிப்படையினரை மதுரை காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார்.