விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை குறி வைத்து திருடும் வாலிபர்கள்!
மதுரையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை வாலிபர்கள் இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவர் கடந்த மாதம் தன்னுடைய விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை கடை முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர் வந்து பார்க்கும் போது இருசக்கர வாகனம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இந்நிலையில் விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை குறிவைத்து ஒரு கும்பல் திருடி வருவது தொடர்பாக அலங்காநல்லூர் போலீசாருக்கு புகார்கள் குவிந்துள்ளது.இதனையடுத்து போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக கொண்டு இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் இருக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த தமிழ் பாண்டி என்ற வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.அவரிடமிருந்து
திருடப்பட்ட இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலிசார் தப்பியோடிய மற்ற இருவாலிபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.