மதுரையில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவு
மதுரையில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிகரிக்கும் வெப்பநிலை
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
அதில், உலகில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் 14 இந்திய நகரங்களில் மதுரை 7ஆவது இடத்தில் உள்ளது.

பொதுவாக மதுரையில் ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதால், மழை அல்லது குளிர்ந்த காற்று வீசுவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும்.
ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய பிறகும் மதுரையில் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பதிவான வெப்பம்
ஜூலை மாதத்திலும் மதுரையில் அதிக வெப்பம் பதிவாவது புதிதல்ல என சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு புள்ளிவிவரப்படி, மதுரையில் 2019ஆம் ஆண்டு ஜூலையில் 106.1°F, 2020ஆம் ஆண்டு 103.4°F, 2021ஆம் ஆண்டு 104°F, 2023ஆம் ஆண்டு 107°F, 2024ஆம் ஆண்டு 104°F, 2025ஆம் ஆண்டு 106.7°F வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதுரையில் நேற்று முன்தினம் 108.5°F வெப்பநிலை பதிவானது.
இதனைத்தொடர்ந்து நேற்றும் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.