வெளியானது ஜெயிலர் படம்..மதுரையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட ரசிகர்கள்

Rajinikanth Tamil Cinema Jailer
By Karthick Aug 10, 2023 05:42 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், மதுரையில் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான முறையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர். 

ரஜினியின் ஜெயிலர் 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார் என பலர் நடித்து அனிருத் இசையில் இன்று திரையரங்கில் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு சிறப்பு காட்சிகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்டது.

madurai-rajini-fans-takes-oath

கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்

madurai-rajini-fans-takes-oath

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக ஜெயிலர் இருந்ததாலும், படத்தின் இசை, ட்ரைலர் என பலவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், இன்று அநேக திரையரங்குகள் housefull காட்சிகளாக துவங்கியுள்ளது.

ரசிகர்கள் உறுதிமொழி 

படம் தற்போது positive விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், மதுரையில் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான முறையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர்.படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், ரஜினி தனது ரசிகர்களுக்கு மது அருந்த வேண்டாமென அறிவுரை வழங்கினார்.

madurai-rajini-fans-takes-oath

அதனை குறித்து தற்போது அவரது ரசிகர்கள் ரஜினி அறிவுறுத்திய படியே இனி மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர்.