மதுரையில் விரைவில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும்..! அமைச்சர் மூர்த்தி அதிரடி..!
மதுரையில் விரைவில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் ஊரடங்கு நடைமுறைகளை கண்காணிக்க தமிழக அரசு, அமைச்சர்கள் அடங்கிய குழுக்களை நியமித்திருந்தது.
இந்த நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வரும் போலீசாரிடம் போக்குவரத்து நடமாட்டம் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழு ஊரடங்கை மக்கள் 100 சதவீதம் பின்பற்றி வருவதாகவும், மருத்துவ தேவைகளை தவிர்த்து பிற தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியே வர வில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், விரைவில் மதுரையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.