மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த ஜே.பி.நட்டா!
தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுகவில் கூட்டணிக் கட்சியாக உள்ள பாஜக இன்று முதல் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ளனர். இதற்காக அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
நேற்று இரவு மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு பாஜகவின் மாநில தலைவர் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

அந்த வகையில் அதிமுகவில் கூட்டணிக் கட்சியாக உள்ள பாஜக இன்று முதல் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ளனர். இதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார் இதைத்தொடர்ந்து நண்பகல் 11 மணிக்கு பாஜக சார்பில் நடக்கும் மாநில குழு கூட்டத்திலும், 12.30 மணிக்கு பாஜகவில் தகவல் தொழில்நுட்ப குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
மாலை 4 மணிக்கு முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் அவர், மாலை 6:15 மணிக்கு தொடங்கும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கே விடுதிக்கு திரும்பும் அவர் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, மறுநாள் காலை மதுரையில் இருந்து புதுச்சேரிக்கு செல்கிறார்.