மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்ட்டம் : திரளான பக்தர்கள் தரிசனம்

Madurai
By Irumporai May 03, 2023 03:09 AM GMT
Report

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

  மதுரை மீனாட்சி 

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வோடு நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதி திக் விஜயம் நடைபெற்றது. அடுத்து நேற்று 10ஆம் நாளில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

நேற்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பெண்கள் திருமண வைபோகத்தின் போது தங்கள் தாலியை புதுப்பித்து கட்டி கொண்டனர். 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்ட்டம் : திரளான பக்தர்கள் தரிசனம் | Madurai Meenakshi Sundareswarar Chariot Started

தேர்திருவிழா

இதனை தொடர்ந்து இன்று 11ஆம் நாள் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் மதுரை வீதிகளில் வீதிஉலா வருவர். தற்போது இந்த வைபவம் நடைபெற்று வருகிறது. மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் தேர்களை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து வருகின்றனர். நாளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற உள்ளது.