செக் குடியரசுப் பெண்ணை காதல் திருமணம் செய்த மதுரைக்காரர்...!
செக் குடியரசுப் பெண்ணை மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்
மதுரையைச் சேர்ந்த காளிதாஸ் செக் குடியரசில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து, காளிதாஸுக்கு, செக் குடியரசைச் சேர்ந்த ஹானா பொம்குலோவா என்ற பெண் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார். கொரோனா காரணமாக வீடு திரும்பிய காளிதாஸ், ஹானாவுடன் நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இந்து முறைப்படி திருமணம்
இதற்கிடையில், காளிதாஸ் தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் காதலை குறித்து கூறியுள்ளார். இந்நிலையில், தன் வீட்டாரின் விருப்பத்துடன் காளிதாஸ் இந்து முறைப்படி செக் குடியரசைச் சேர்ந்த ஹானா பொம்குலோவாவை திருமணம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.