அதிகாலையில் நடந்த பயங்கரம்: 5 பேர் பலி

Madurai
By Fathima Jul 13, 2026 03:40 AM GMT
Report

மதுரையில் இன்று அதிகாலை அரசுப்பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 41 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்டது எப்படி?

சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது, கொட்டாம்பட்டி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றதால் நடுவே இருந்த தடுப்பு மையத்தில் பலமாக மோதியதுடன் எதிரே வந்த அரசுப்பேருந்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

அதிகாலையில் நடந்த பயங்கரம்: 5 பேர் பலி | Madurai Kottampatti Near Accident 5 Killed

5 பேர் பலி

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், விபரம் அறிந்து விரைந்து வந்த போலிஸ் அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை தொடங்கியது

இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு சரக டிஐஐி அபினவ் குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் சென்று பார்வையிட்டனர், வழக்குபதிவு செய்துள்ள கொட்டாம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.