மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டு

theft madurai jewelry grandmother
By Jon Mar 23, 2021 05:34 PM GMT
Report

மதுரையில் மூதாட்டியிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தானப்ப முதலியார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 62). மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் விடுதி நடத்தி வருகிறார். இவர் வீட்டுக்கு செல்வதற்காக விடுதி முன்பு ஆட்டோவுக்காக காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் சரஸ்வதியிடம் இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. எனவே நகையை கழற்றி கைப்பையில் வைத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

உடனே அவரும் தனது நகையை கழற்றி பையில் வைத்துள்ளார். அப்போது அவர்கள் திடீரென்று நகை வைத்திருந்த பையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.