பச்சிளம் குழந்தை கீழே விழுந்து உயிரிழப்பு - மாட்டுத்தாவணியில் நடந்தது என்ன?
மாட்டுத்தாவணி அருகே பச்சிளம் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீனா (37). 8 மாத கர்ப்பிணியான இவர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஓய்வறையில் படுத்திருந்து எழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரவீனாவுக்கு பிரசவலி ஏற்பட்டுள்ளது.
மேலும் வயிற்றில் உள்ள தண்ணீர் குடம் உடைந்து அங்கேயே ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார் ஆனால் அவருடன் யாரும் இல்லாததால் குழந்தை கீழே விழுந்து காயம் அடைந்துள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
இதனை கண்டு பிரவீனா கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர் . உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவிலியர்கள் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .
அங்கு தாய் மற்றும் குழந்தை இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிறந்து சில மணி நேரமே ஆனா பச்சிளம் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் மாட்டுத்தாவணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.