Saturday, Jul 5, 2025

மனைவியை சேர்த்துவைக்கக்கோரி கணவர் செய்த ரகளை - பொதுமக்கள் அதிர்ச்சி

protest husband madurai drunken
By Anupriyamkumaresan 4 years ago
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர், மதுபோதையில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி சாகசம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மதுரை வில்லாபுரம் அருகே மூலக்கரை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பாக்கியலெட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.கணவனின் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக பாக்கியலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மனைவியை சேர்த்துவைக்கக்கோரி கணவர் செய்த ரகளை - பொதுமக்கள் அதிர்ச்சி | Madurai Husband In Drunk Protest

கடந்த 6 மாதங்களாக பலமுறை வீட்டிற்கு வருமாறு மனைவியிடம் கோரிக்கை விடுத்தும் மனைவி பாக்கியலட்சுமி வர மறுத்ததை தொடர்ந்து மனமுடைந்த கணவர் கண்ணன் இன்று மதுபோதையில் திடீரென கீரைத்துறை பகுதியில் உள்ள செல்போன் டவரின் உச்சியில் ஏறி நின்றபடி மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க கோரி தற்கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்தார்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த கீரைத்துறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இளைஞரின் மனைவியான பாக்கியலெட்சுமியை அழைத்துவந்து அழைப்பு விடுத்த பின் போதை இறங்கியவுடன் டவரில் இருந்து வேகவேகமாக கீழே இறங்கி வந்தார்.