கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு - அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
ரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தவெக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டப ல்வேறு மனுக்கள் இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்?, விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்த கடிதம் எங்கே? கூட்டத்தில் குடிநீர், சுகாதார வசதிகள் இருந்தனவா? அவற்றை காவல்துறை கண்காணித்ததா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
விதிகள் வரையறுக்கப்படும் வரை புதிய கூட்டங்களுக்கு அனுமதி இல்லை” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே அனுமதி பெற்றுள்ள கட்சிகளின் கூட்டங்களுக்கு தடையில்லை. மேலும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்களுக்கு இனி அனுமதி கிடையாது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிபிஐக்கு மாற்ற மனு
சிபிஐக்கு மாற்ற கோரிய மனு தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணை நடைபெற்று அதில் திருப்தி இல்லை என்றால், சிபிஐ விசாரணைக்கு கோரலாம். ஆனால் தொடக்க நிலையிலேயே விசாரணையை சிபிஐக்கு மாற்றும்படி எப்படி கேட்க முடியும்?
மனு தாக்கல் செய்த நபர் பாதிக்கப்பட்டவராக இல்லாத நிலையில், சிபிஐ விசாரணை கோரா என்ன தகுதி உள்ளது? நீதிமன்றத்தை அரசியல்மேடையாக்க வேண்டாம். கரூர் துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணிப்பாருங்கள் என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.