இதை செய்தால் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை தான் : நீதிமன்றம் எச்சரிக்கை

By Irumporai Sep 12, 2022 09:44 AM GMT
Report

 சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.  

நீதி மன்றம் எச்சரிக்கை

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினர்.

இதை செய்தால்  தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை தான் : நீதிமன்றம் எச்சரிக்கை | Madurai High Court Warns Tamilnadu Tasmac

மது அருந்தும் பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க கோரிய வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.