தடுப்பூசி செலுத்தி கொள்ள விருப்பம் இல்லையென்றால் போட்டுக்கொள்ளாதீர்கள்: நீதிமன்றம் கருத்து

vaccine corona people
By Jon Jan 29, 2021 05:13 PM GMT
Report

மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளை விரும்பாவிட்டால் போட்டுக்கொள்ள வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது.

முதற்கட்டமாக தற்போது முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்தி கொள்ள விருப்பம் இல்லையென்றால் போட்டுக்கொள்ளாதீர்கள்: நீதிமன்றம் கருத்து | Madurai High Court Order

இதுவரை 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

இந்த நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த தடைக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  

[2அப்போது, மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றதால் தடுப்பூசிகளுக்கு தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.