சென்னையை தொடர்ந்து மதுரையிலும் தடம் புரண்ட ரயில் - பீதியில் மக்கள்

Madurai
By Swetha Subash Apr 25, 2022 11:22 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

மதுரையில் சரக்கு ரயில் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்து - பயணிகள் ரயில்கள் புறப்பாடு நிறுத்தம்

சென்னையில் இருந்து டிராக்டர்கள் எடுத்துசெல்வதற்காக பயன்படுத்தபடும் 25 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் கூடல் நகர் பகுதியிலிருந்து இருந்து மதுரை ரயில்வே நிலையத்திற்கு பராமரிப்பிற்காக வந்து கொண்டிருந்தது.

அப்போது செல்லூர் அருகே திடிரென அந்த ரயிலின் கடைசி சரக்குபெட்டி தடம் புரண்டது. இதனையடுத்து மற்ற 24 பெட்டிகளுடன் ரயில் புறப்பட்ட நிலையில் ஒரு பெட்டி மற்றும் மாற்றும் இயந்திரத்தை மற்றும் தண்டவாளத்தில் நிறுத்தி அதனை ரயில்வே பணியாளர்கள் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் தடம் புரண்ட ரயில் - பீதியில் மக்கள் | Madurai Goods Train Runs Off Track

இதன் காரணமாக மதுரையில் இருந்து புறப்பட்டு சென்ற குருவாயூர் சென்னை வரையிலான பயணிகள் ரயில் மதுரை ரயில்வே நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆகவே மதுரையில் இருந்து 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய குருவாயூர்-சென்னை விரைவு ரயில் 2 மணி 43 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டுள்ளது.

இதேபோன்று மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்ல கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் புறப்படும் நேரத்திலும தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக விபத்து குறித்து மதுரை கோட்ட மேலாளர் தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னையை தொடர்ந்து மதுரையிலும் சரக்கு ரயில் தடம் புரண்டது ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.