மதுரையில் ரெம்டெசிவர் மருந்திற்காக அலைமோதும் கூட்டம் .. காத்து கிடக்கும் பொதுமக்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்காக மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பரிதவிப்புடன் பொதுமக்கள் காத்துகிடக்கின்றனர்.
மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த வாரம் முதல் தொடங்கியது.
நாள் ஒன்றுக்கு ஐநூறு மருந்துகள் மட்டுமே பொது விற்பனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ரெம்டெசிவர் மருந்து இருப்பு இல்லை எனக்கூறி விற்பனை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் விற்பனை துவங்கப்பட்டது. மருந்தினை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர்.
ஆனால் காத்திருக்கும் அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து கிடைப்பதில்லை என்பதுதான் சோகத்தின் உச்சம்.