மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லுார் ராஜு - கலாய்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு..!
Madurai
Tamil Nadu Legislative Assembly
By Thahir
மதுரைக்கு சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லுார் ராஜு என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்லுார் ராஜு கேள்வி நேரத்தின் போது மதுரையில் பொழுது போக்கு இடமே இல்லை. மதுரை மக்கள் 20 லட்சம் பேர் இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது அவர் அந்த கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் சபாநாயகர் அப்பாவு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பதில் அளிக்க அழைத்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர்,மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லுார் ராஜு என பதில் அளித்தார் இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு IBC Tamil
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மீளப்பெறமுடியாத சமஷ்டி தீர்வு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை IBC Tamil