சாத்தான்குளம் வழக்கு : ஜாமின் மனு ஒத்திவைப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரும், இவரின் மகன் பென்னிக்ஸும் செல்போன் கடை நடத்திவந்தனர். கடந்த ஆண்டு, ஜூன் 19-ம் தேதி ஊரடங்கின் போது குறித்த நேரத்துக்குள் கடையை அடைப்பது தொடர்பாக போலீஸாருக்கும் ஜெயராஜுக்கும் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயராஜ்.
அப்போது தந்தையைத் தேடி ஸ்டேஷனுக்குச் சென்ற பென்னிக்ஸ், போலீஸார் தன் தந்தையை தாக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து தடுக்க முயன்றிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த போலீஸார் தந்தை, மகன் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனில்வைத்து இரவு முழுவதும் கடுமையாகத் தாக்கவே, இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
தொடர்ந்து, சாத்தான்குளம் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின், இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22-ம் தேதி இரவில் பென்னிக்ஸும், 23-ம் தேதி அதிகாலையில் ஜெயராஜும் சிறையிலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த நிலையில் இந்த வழக்கில் சம்மந்தபட்ட முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் வழக்கு விசாரணை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்