ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தியது தவறு - மதுரை உயர்நீதிமன்ற கிளை காட்டம்
ஆவின் ஊழல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை தேடிவருகிறது.
இதுவரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். இதனிடையே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் மதுரை வீட்டில்,
உரிய வாரன்ட் இல்லாமல் போலீசார் சோதனை நடத்தியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சரண்டர் ஆக வேண்டும். அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.
நாளை, அல்லது நாளை மறு நாள் உச்சநீதிமன்றத்தில், ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கோரிய வழக் கு விசாரணைக்கு வர உள்ளது.
தீர்ப்பின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி வழக்கை சந்திப்பார் என அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் மதுரை வீட்டில், உரிய வாரன்ட் இல்லாமல் ஏன் சோதனை மேற்கொண்டனர் என்பது குறித்து மதுரை மாவட்ட SP பாஸ்கரன், பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7 ம் தேதி ஒத்தி வைத்தது.