ஊர் திருவிழாவை நடத்துங்க: உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி
மதுரையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம் தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்தவர் அருண், இவருக்கும் செல்லூர் பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, காதலித்த இருவரும் பெற்றோர் சம்மதப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அருண் ஆட்டோ டிரைவராக இருக்கிறார், பிரியா சிம்மக்கல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார், கடந்த சில மாதங்களுக்கு முன் அருண் விபத்தொன்றில் சிக்க கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் அடுத்தடுத்த மருத்துவ செலவுகள் என சிக்கலில் மாட்டினார் அருண், பழையபடி வேலையையும் தொடர முடியாததால் வறுமை வாட்டியது, மனஉளைச்சலுக்கு ஆளான அருண் செத்துவிடலாம் என பிரியாவிடம் அடிக்கடி சொல்லி வந்துள்ளார்.

அருண் இல்லாமல் தன்னால் தனியாக வாழ முடியாது என கூறிய பிரியா, இருவரும் ஒன்றாக இறப்பது என முடிவு செய்துள்ளனர்.
இதன்படி இறப்பதற்கு முன்னதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கில் தொங்கியுள்ளனர், அந்த கடிதத்தில், எங்கள் முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களின் கடைசி ஆசையாக, எங்களை ஒரே இடத்தில் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள். மேலும் எங்களுடைய இறப்பை காரணம் காட்டி ஊர் கோவில் திருவிழாவை நிறுத்தி விடாதீர்கள் என எழுதியுள்ளனர்.
இவர்களது சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.