நாங்கள் கொலை செய்ய முயற்சி செய்தோமா - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்

Dhanush
By Irumporai May 21, 2022 04:49 AM GMT
Report

நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியை மன்னிப்பு கேட்ககோரி, இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன்  மீனாட்சி தம்பதி, மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அத்துடன் ஊடகங்களிலும் தனுஷ் தங்கள் மகன் என்று பேட்டி அளித்து இருந்தனர்.

நாங்கள் கொலை செய்ய முயற்சி செய்தோமா  - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ் | Madurai Couple Director Kasthuri Raja And Dhanush

இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இந்த நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாக கூறி, கதிரேசன் தம்பதி நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.  

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் எனவும் கதிரேசன் தம்பதிக்கு வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.