விபரீத முடிவெடுத்த காதல் தம்பதி! சிக்கிய உருக்கமான கடிதம்
மதுரையில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதியினர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மதுரை ஊமச்சிகுளம் சாஸ்திரி தெருவைச் சோ்ந்த அருண் (28) என்பவருக்கும் செல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரியாவுக்கும் (26) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றததாக தெரியவந்துள்ளது.

மேலும், அருண் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு விபத்தில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதால், வேலைக்குச் செல்லாமல் அவா் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இவரது மனைவி பிரியா சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவா்களுக்கு குழந்தை இல்லை. குடும்ப சூழல், தன்னுடைய மருத்துவ செலவு உள்ளிட்ட காரணங்களால் அருண் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தான் தற்கொலை செய்து கொள்வதாக மனைவியிடம் குறித்த நபர் புலம்பியுள்ளார். கணவர் இல்லாத வாழ்க்கையை வாழ முடியாது என தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாக பிரியா கூறியுள்ளார்.
அதன் பின்னரே இவர்கள் இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சாஸ்திரி தெருவில் உள்ள வீட்டில் கடந்த புதன்கிழமை அன்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகின்றது.
அதனை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கணவன்-மனைவி இருவரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வீட்டில் அவர்களது அறையில் போலீசார் சோதனை செய்த போது ஒரு கடித்தையம் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கடிதத்தில், "எங்கள் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள். எங்களுடைய இறப்பை காரணம் காட்டி கோவில் திருவிழாவை நிறுத்தி விட வேண்டாம்" என எழுதப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.