இனி வீடுகளில் நாய், பூனை வளர்க்க கட்டணம் - எவ்வளவு தெரியுமா?
வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்போரிடம் கட்டணம் வசூலிக்க மதுரை மாநகராட்சி முன்வந்துள்ளது.
செல்லப்பிராணி வளர்ப்பு
பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை போன்ற பல்வேறு விலங்குகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் அதை கண்காணிக்காமல் சாலைகளில், விடுவதால் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
மேலும் பலர், செல்ல பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசி போடாமல் விடுவதால் ரேபிஸ் போன்ற நோய் தொற்று ஏற்படுகிறது.
மதுரை மாநகராட்சி
இந்நிலையில் செல்ல பிராணிகளை வளர்ப்பதற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகராட்சி செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு கட்டணம் விதிக்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் படி, நாய்/பூனை வளர்க்க ரூ.750, மாடு வளர்க்க ரூ.500, ஆடு வளர்க்க ரூ.150, பன்றி வளர்க்க ரூ.500, குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகு ஒரு சில மாதங்களில் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சியின் இந்த முடிவு மதுரை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.