மதுரை மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!

Madurai
By Karthikraja Jan 26, 2025 04:30 PM GMT
Report

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்த மதுரைக்கு வரலாற்றில் மிகப்பெரிய இடம் உண்டு. ,மதுரை மாவட்டம் மெட்ராஸ் மாகாணம் இருந்த போதே மதுரை மாவட்டமும் இருந்தது. 

madurai district

தற்போதைய திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகள் முன்பு மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தன.

சங்கீதா ஐ.ஏ.எஸ்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா ஐ.ஏ.எஸ். தமிழக அரசின் குரூப் 1 அலுவலராக பணி நியமனம் பெற்று, 2016 ஆம் ஆண்டு பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றார். 

madurai collector sangeetha ias

திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியர், உயர் கல்வித்துறை துணை செயலாளர், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கூடுதல் மேலாண் இயக்குநர், வணிக வரித்துறை இணை கமிஷனர் ஆகிய பதவிகளை வகித்து வந்த இவர், கடந்த 22.05 .2023 மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் மதுரையின் 3வது பெண் மாவட்ட ஆட்சியர் ஆவார்.

அனீஷ் சேகர் ஐ.ஏ.எஸ்

கேரளாவை சேர்ந்த அனீஷ் சேகர், 2011 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சேலம் சப் கலெக்டர், கோயம்புத்தூர் வணிகவரி துறை இணை ஆணையர், மதுரை மாநகராட்சி கமிஷனர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) நிர்வாக இயக்குனர், Guidance Tamilnadu, நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் நிர்வாக இயக்குநர் ஆகிய பல்வேறு பதவிகளை வகித்து வந்த இவர் மே 2021 முதல் மே 2023 வரை நடுராய் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.

இவர் தனது ஆட்சி காலத்தில் பல்வேறு அதிரடி மற்றும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது சைக்கிளில் பயணிக்குமாறு அரசு ஊழியர்களை ஊக்குவித்தார். 

anish sekar ias

இதன் பின்னர் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன்(ELCOT) நிர்வாக இயக்குனராக பணியாற்றிய போது தனிப்பட்ட காரணங்களுக்காக தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தனது ராஜினாமா முடிவைத் திரும்ப பெற்றதையடுத்து, தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின்’ மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

சந்திரலேகா ஐ.ஏ.எஸ்(ஓய்வு)

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்(ஓய்வு) 1991-92 காலகட்டத்தில் மதுரை மாவட்டத்தின் 2 வது பெண் ஆட்சியராக பணியாற்றினார். 

அதற்கு முன்னதாக மதுரை மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக சந்திரலேகா ஐ.ஏ.எஸ்(ஓய்வு) 1984-85 காலகட்டத்தில் பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டின் 2வது பெண் மாவட்ட ஆட்சியர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு டிட்கோ நிர்வாக இயக்குனராக பணியாற்றிய போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர் மீது ஆசிட் வீசப்பட்டது. 

சந்திரலேகா ஐ.ஏ.எஸ்

அதன் பிறகு தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஜனதா கட்சியில் இணைந்து தமிழ்நாடு மாநில தலைவராக செயலாற்றினார். தற்போது சுப்ரமணிய சுவாமி தலைமையிலான விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

உ சகாயம் ஐ.ஏ.எஸ்(ஓய்வு)

மிக நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக கருதப்பட்ட உ சகாயம் ஐ.ஏ.எஸ்(ஓய்வு) மார்ச் 2011 இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 2011 சட்ட மன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்தார். இதற்காக தேர்தல் ஆணையத்தின் பாராட்டை பெற்றார்.

மதுரை மாவட்டம் கிரானைட் குவாரிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரியாக சகாயம் ஐ.ஏ.எஸ் நியமிக்கபட்ட போது, ஏற்றுமதி நிறுவனம் ஒன்று நரபலி கொடுத்ததாக புகார் கிடைத்தது. அதனையடுத்து, அங்கு விசாரிக்க சென்ற போது இரண்டு சடலங்களின் எலும்புக்கூடு, மண்டை ஓடுகள் இருப்பது தெரிய வந்தது.

மேற்கொண்டு ஆய்வு செய்ய காவல்துறையினர் உட்பட மாவட்ட நிர்வாகத்தினர் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததையடுத்து, தடயத்தை அழித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இரவு முழுவதும் சுடுகாட்டிலே படுத்து உறங்கினார்.

தமிழ்நாட்டில் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தனது சொத்துபட்டியலை வெளியிட்டார். இவர் தனது நேர்மையான நடவடிக்கை காரணமாக 29 ஆண்டு கால பணிக்காலத்தில் 26 முறை இடமாற்றம் செய்யப்பட்டார். 

You May Like This Video