ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை - காவல்துறை அதிரடி

Madurai
By Sumathi Apr 13, 2023 07:49 AM GMT
Report

ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

 Rapido

நாடு முழுவதும் பைக் டாக்ஸி சேவைகள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், Rapido நிறுவனத்தின் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை bike taxi ஆக பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை - காவல்துறை அதிரடி | Madurai Collector Banned The Rapido Bike Service

இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த Rapido bike taxi என்ற தனியார் நிறுவனம் முறையான அனுமதி பெறாமல் மதுரையில் 2000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை உறுப்பினர்களாக்கி இயங்கியது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தடை

இந்நிலையில், 40க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மீது மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சட்டப்படி அங்கீகாரம் பெறாத Rapido நிறுவனத்திடம் மொபைல் செயலி வழியாக உறுப்பினர்களாகி இயங்கி வரும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Rapido bike taxi வாகனங்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுளது. பறிமுதல் செய்யப்படும் வாகன உரிமையாளர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.