மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அனிஷ்சேகர் நியமனம்!
மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அனிஷ்சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் 5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி அதிரடியாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அனிஷ்சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தின் 216 வது ஆட்சியராக டாக்டர். அனிஷ்சேகர் இன்று பொறுப்பேற்றுகொண்டார். கடந்த 2011ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், மதுரை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்துள்ளதால், மதுரை மக்களின் தேவை அறிந்து அதனை நிறைவேற்றுவேன். மதுரையில் தீயாய் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவேன் என்றார்.