வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் உதவி எண்கள் அறிவிப்பு
கூட்ட நெரிசலில் சிக்கி யாரேனும் காணாமல் போயிருந்தால் உதவி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மதுரையில் கள்ளழகர் வையாற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த பொதுமக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்றால் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில் இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதையடுத்து மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் மதுரை மாநகரமே குலுங்கியது.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயரிழந்தவர்களில் ஒருவர் ஆண் மற்றும் மற்றொருவர் பெண் என தெரியவந்துள்ளது.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்க 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.உயிழந்தவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. 94980 42434,கூட்ட நெரிசலில் சிக்கி யாரேனும் காணாமல் போயிருந்தால் உதவி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து சிகிச்சை பெறுபவர்களை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி நேரில் சந்தித்து உரிய சிக்கிசை அளிக்க உத்தரவிட்டார்.