சித்திரை திருவிழாவையொட்டி மதுரை வந்தடைந்தது வைகை நீர்..!
சித்திரை திருவிழாவை அடுத்து வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் மதுரை வந்தடைந்தது.
வைகை அணையிலிருந்து மதுரை சித்திரை திருவிழாவை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா சிறப்பாக நடத்த தமிழக அரசு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மதுரையில் கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
இதையொட்டி வைகை அணையில் இருந்து 11ம் தேதி மாலை தண்ணீர் அணையில் உள்ள சின்ன மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வினாடிக்கு 1072 கனஅடி தண்ணீர் சின்ன மதகு வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது இன்று மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கல்பாலம் வந்தடைந்தது.
அதோடு தொடர்ந்து மூன்று நாட்களாக மதுரை தேனி மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக மழை வெள்ள நீரும் வைகை ஆற்றில் சேர்ந்த ஓடி வருகிறது.
16ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இல்லாத நிலையில் இந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.