மதுரையில் கொரோனாவால் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு - காப்பாகத்திற்கு சீல் வைப்பு
மதுரை தனியார் காப்பகத்தில் காணாமல் இரண்டு குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தலைமறைவான நிர்வாகிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் 23 ஆம் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட 1 வயது குழந்தை மாணிக்கம் உயிருடன் மீட்கப்பட்டான். அந்த குழந்தையுடன் காணாமல் போன காப்பகத்தில் இருந்த கர்நாடகா பெண்ணின் 2 வயது பெண் குழந்தையும் மீட்கபட்டுள்ளது.
கடந்த மாதம் 13 ஆம் தேதி ஆண் குழந்தை மதுரை இஸ்மாயில்புரம் நகைக்கடை உரிமையாளர் தம்பதியருக்கு குழந்தையை விற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ள நிலையில்,
16 ஆம் தேதி அன்று பெண் குழந்தை மதுரை கருப்பாயூரணி அருகேயுள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு விறக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதயம் அறக்கட்டளையின் தலைவர் சிவக்குமார் தலைமறைவான நிலையில் அறக்கட்டளையின் பணியாற்றிய ஊழியர்களிடம் பிடித்து மதுரை தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்