சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக கொடுத்த சிறுவன்: முதல்வர் ஸ்டாலின் செய்த நெகிழ்ச்சி செயல்

corona stalin child savings
By Praveen May 09, 2021 02:19 PM GMT
Report

 சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கொரோனோ நிதியாக வழங்கிய சிறுவனுக்கு சைக்கிள் வாங்கிகொடுத்த முதல்வரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவணை போனில் வாழ்த்திய முதல்வர் கொரோனோ காலம் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ-தீபா தம்பதியின் 7 வயது மகன் ஹரீஸ்வர்மன் தனக்கு சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை தற்போது நிலவி வரும் கொரோனோ பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காண நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

சிறுவனின் முயற்சியை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சார்பில் சிறுவனுக்கு புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். புதிய சைக்கிளை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி நேரில் சென்று சிறுவனிடம் வழங்கினார்.

அப்போது சிறுவனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் முக.ஸ்டாலின்,தற்போது கொரோனோ காலம் என்பதால் வெளியே சைக்கிளை இயக்க வேண்டாம் எனவும் நன்றாக படிக்க வேண்டும் எனவும் போனில் அறிவுறுதினார், அப்போது மழலை பேச்சில் வாழ்த்துக்களை தெரிவித்தார் சிறுவன் ஹரீஸ்வர்மன்.